சினி இடைத்தேர்தல் வெற்றி 15ஆவது பொதுத்தேர்தலுக்கான அறிகுறியாகும்

பெக்கான்: சினி இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு  நாளை (ஜூலை 4) நடைபெற இருக்கும் வேளையில் நிலையில், 15ஆவது பொதுத் தேர்தலுக்கான ஒரு அறிகுறியாக இருக்கும் என்றும் இந்த இடைத்தேர்தலின் வழி  நல்ல முடிவுகளைக் காண விரும்புகிறேன் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசன் (படம்) தெரிவித்துள்ளார்.

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா மற்றும் பாஸ் ஏற்கனவே தங்கள் ஆதரவை வழங்கியதால்   பாரிசன் நேஷனல் அதன் பெரும்பான்மையை இரட்டிப்பாக்க விரும்புகிறது என்று அவர் கூறினார். பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல்  இடைத்தேர்தல் இதுவாகும். எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடிய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி இடைத்தேர்தலாக இது இருக்கலாம் என்று முகமட் கூறினார்.

கிம்மாஸ், கேமரன் ஹைலண்ட்ஸ், ரந்தாவ் மற்றும் தஞ்சோங் பியா ஆகிய இடங்களில் உள்ளவர்களுடன் சினி மக்களும் ஒன்றாக  இருக்கின்றனர் என்பதைக் காட்ட இந்த இடைத்தேர்தல் அமையும்  என்று அவர் கூறினார். கூட்டத்தில்  பாஸ் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மேன், எம்சிஏ தலைவர் டத்தோஶ்ரீ  டாக்டர் வீ கா சியோங், பகாங் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், பாரிசன் பொதுச் செயலாளர் டான் ஸ்ரீ அன்வார் மூசா, பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோஶ்ரீ  நஜீப்,  அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஶ்ரீ  அஹ்மத் மஸ்லான் மற்றும் அம்னோ இளைஞர் தலைவர் டத்தோ டாக்டர் அசிராஃப் வாஜ்தி துசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், கட்சி ஒரு முடிவை எடுத்தவுடன் பாஸ் உறுப்பினர்கள் எப்போதும் அதற்கு மதிப்பளிப்பவர்கள் என்று அறியப்பட்டதாக துவான் இப்ராஹிம் கூறினார். அவர்கள் வாக்களிக்க வருவார்கள். கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு அவர்கள் வாக்களிப்பார்கள் என்று அவர் கூறினார்.

கேமரன் ஹைலேண்ட்ஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இருந்து பாஸ் மற்றும் அம்னோ ஒத்துழைப்பு பலனளித்ததாகவும், இன்னும் வேகத்தை அடைந்து வருவதாகவும் துவான் இப்ராஹிம் மேலும் கூறினார். GE14 இல், மறைந்த சினி சட்டமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ  அபுபக்கர் ஹருன் 10,027 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தேர்தலில், பாரிசனின் முகமட் ஷரீம் எம்.டி.ஜெய்ன் சுயேச்சைகளான தெங்கு டத்தோ ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் முகமட் சுக்ரி முகமட் ராம்லி ஆகியோரை எதிர்கொள்கிறார். சினி இடைத்தேர்தல் மும்முனை போட்டியாக நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here