விஜய்க்கு எதிராக விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பை திரையில் பார்க்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து அவர் மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
’மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கேரக்டர் வில்லன் என்றும் துளிகூட நல்லவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனது கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.