தங்க மாஸ்க்

கொரோனா வைரஸ் பரவலை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனால் மக்கள் தங்களது வசதிக்கு ஏற்ற விலைகளில் மாஸ்க்கை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் சங்கர் குராடே என்பவர் தனது ஆடம்பரத்தை வெளிக்காட்டும் வகையில் தங்கத்தில் மாஸ்க் அணிந்து விளம்பரத்தை தேடிக்கொண்டுள்ளார்.

அந்த தங்க மாஸ்கின் மதிப்பு ரூ .2.89 லட்சம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் கூறுகையில், ” இது சிறிய துகள்களை கொண்ட ஒரு மெல்லிய முகமூடி, அதனால் சுவாசிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் இந்த முகமூடி எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை ” என தெரிவிக்கிறார்.

தங்க நகையின் மீது அதிக நாட்டம் கொண்ட சங்கர் குராடே, இனி நகைகளை அணிந்துகொள்ள இடமே இல்லை என்ற அளவுக்கு உடல் முழுவதும் மோதிரம், செயின், பிரேஸ்லெட் என்று அடுக்கடுக்காக அணிந்து கொண்டு நடமாடும் நகை கடையாக வளம் வருகிறார். இந்த அளவுக்கு வசதி படைத்தவர், காட்டன் மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்கு உதவி செய்யலாமே” என்றும் பலர் கருத்துதெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here