எதிர்ப்புறம் காரோட்டியவர் தேடப்படுகிறார்!

கிள்ளான் ஜாலான் மேரு சாலையொன்றில்  போக்குவரத்துக்கு இடையூறாக எதிர்ப்புறம் வாகனம் ஓட்டியதாகக் கண்டறியப்பட்ட வெள்ளை ஹூண்டாய் ரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

இரவு 10.50 மணியளவில் புக்கிட் ராஜா நோக்கி மூன்று வழி சாலையின் ஹாஜி அப்துல் மனான் சந்திப்பில், போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக இயங்கிய கார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி நூருல்ஹுடா முகமட் சாலே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்னும் தீர்மானிக்கப்படாத பதிவு எண்ணைக் கொண்ட வெள்ளை ஹூண்டாய் வாகனம் போக்குவரத்து ஓட்டத்திற்கு எதிராக இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால், மற்ற சாலை பயநர்களுக்கு ஆபத்தாக அமைந்திருந்தது.

விசாரணையை எளிதாக்குவதற்காக ஓட்டுநர் தேடப்படுகிறார். இதன் தொடரில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தொடர்புக்கு 013-4146144 என்ற எண்ணில் இன்ஸ்பெக்டர் அப்துல் அஸிம் மஸ்லானைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்  .

சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று நூருல்ஹுடா  கூறினார்.

முன்னதாக, வாட்ஸ்அப்பில் வைரலாகி,  பொதுமக்களால் பார்வையிடப்பட்ட ஒரு வீடியோ காட்சி, போக்குவரத்து நெரிசலுக்கு எதிராக கார் இயக்கப்படுவதைக் காட்டியது, இதனால் மற்ற சாலை பயநர்கள் மோதுவதைத் தவிர்க்க வேண்டியிருந்தது.

கா. இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here