முகநூல் வாயிலாக வர்த்தகத்தில் ஈடுபடும் பதிவு பெறாத நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம்

நிறுவனப் பதிவிலாகாவிடம் பதிவு பெறாத நிலையில் முகநூல்  வாயிலாக வாடிக்கையாளர்கக் கவர்ந்திழுக்கச் செயல்படும் நிறுவனங்களைச் சார்ந்த நபர்களுக்கு 50 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம் செலுத்தும் வகையிலான விபரீதம் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முகநூல் பயனீட்டாளர்கள் தொடர்ந்து இது போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை அளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நாம் சோதனை செய்து பார்த்தபோது எம்மிடம் பதிவு பெறாத பல்வேறு நபர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுயேச்சையாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தனி நபர்கள், முக ஒப்பனை அலங்கரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினர் முகநூல் வாயிலாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தெரிகிறது.

நிறுவனப் பதிவிலாகாவிடம் முறைப்படி பதிவு பெறாத நிலையில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க முகநூலைப் பயன்படுத்தினால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.

1956ஆம் ஆண்டு வர்த்தகப் பதிவுச் சட்டத்தின் பிரிவு 12(1)ன்படி அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படலாம். குற்றச்சாட்டு நி ரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என நிறுவனப் பதிவிலாகா அறிவித்துள்ளது.

மேல் தகவல்களுக்கு 03-7721 4000 என்ற எண்ணில் அழைத்து தகவல்களைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here