சராவாக்கில் இனி நிதி நிர்வாகம், கணக்கியல் கற்கை இலவசம்- அபாங் ஜொகாரி

கூச்சிங்:

2026 ஆம் ஆண்டு முதல் சரவாக்கிற்குச் சொந்தமான அனைத்து பல்கலைக்கழங்களிலும் நிதி நிர்வாகம், கணக்கியல் ஆகிய துறைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபன் தெரிவித்துள்ளார்.

சரவாக்கில் விரிவடைந்துவரும் பசுமைப் பொருளாதாரத்தின், குறிப்பாக கார்பன் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் நிதி அம்சங்களை நிர்வகிப்பதற்கும் தணிக்கை செய்வதற்கும் இந்தத் துறைகள் முக்கியமானவை என்று அவர் சொன்னர்.

எனவே தகுதியுடைய மாணவர்களுக்கு நிதி நிர்வாகம், கணக்கியல் துறைகளில் இலவசமாக உயர்க்கல்வியைத் தொடர வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் துறைகள் அனைத்துலக தரத்தை கடைபிடிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here