இவ்வாண்டில் பிடிபட்ட நீளமான ராஜநாகத்தை படத்தில் பார்க்கலாம். 4.5 மீட்டர் நீளம் கொண்ட ராஜநாகம் கிளந்தான் மாநிலத்தின் பாசிர் பூத்தே நகரையொட்டிய பெர்மாத்தாங் சுங்கை கிராமத்தில் பிடிபட்டது.
2020ஆம் ஆண்டின் இன்றைய நாள் வரையில் உலகில் பிடிபட்ட மிக நீளமான ராஜநாகமாக இந்த நாகம் பெயர் பெற்றுள்ளது.
நான்கு மீட்புப்படை வீரர்கள் 18 நிமிடங்கள் போராடி நாகத்தைப் பிடித்து வளைக்குள் போட்டனர்.
30 கிலோ கிராம் எடை கொண்ட ராஜநாகம் மாவட்ட பாம்பு பாதுகாப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.