முதன்முறையாக பொதுவெளியில் முக கவசம் அணிந்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதன்முறையாக பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்க முதலிடம் வகித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முகக்கவசம் அணிய மறுத்து வந்தார். இது எதிர்க்கட்சிகளிடையேயும், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சென்றபோது, முகக்கவசம் அணிந்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here