ஆப்பிள் அல்வா செய்வது எப்படி?

இதுவரை நாம் பப்பாளி, அன்னாசிப் பழம், கேரட் போன்றவற்றில் அல்வா செய்திருக்கலாம். ஆப்பிள் பழத்தைக் கொண்டும் அல்வா செய்யலாம். குடும்பத்தோடு அமர்ந்து சுவைப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும். வாருங்கள், ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

ஆப்பிள் – 2

சர்க்கரை – 4 ஸ்பூன்

நெய் – 5 ஸ்பூன்

கோதுமை மாவு – 1ப்

ரவா மாவு-அரை கப்

முந்திரிப் பருப்பு – 10

கேசரி பவுடர் – 1/2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்

பாதாம் பருப்பு- நீங்கள் விரும்பும் அளவுக்கு(மேல் தூவலுக்கு)

ஜயண்ட், என்.எஸ்.கே பேரங்காடிகளில் விற்பனை செய்யப்படும் லேபிள் ஒட்டப்பட்ட உயர்தர ஆஸ்திரேலிய ஆப்பிள்களை வாங்கிக் கொள்ளுங்கள். அவை சுவையை அதிகரிப்பதாக இருக்கும்.

  1. ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.
  2. ரவா மாவை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அடுத்து வாணலியில், நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்துக் கொள்ளுங்கள்.
  4. அடுத்து வேறு ஒரு வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு, ஆப்பிள் துருவலை சேர்த்து நன்கு கிளறுங்கள்.
  5. வெந்ததும் கேசரி கலர், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும். பாதாம் பருப்பை சற்றே தூவி விடுங்கள்.
  6. அல்வா பதம் வந்ததும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறினால் ருசியான ஆப்பிள் அல்வா தயார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here