சென்னை எழிலகத்தில் தீ விபத்து!

சென்னை எழிலகத்தின் நான்காவது தளத்தில் உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஜூலை 23ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து அறிந்த ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பெரிதாக ஆவணங்கள், பொருட்கள் சேதமடையவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தில் இருந்த ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here