ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 என ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ரேஷ்மா பிற பிரபலங்களை போன்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் சேலையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். ரேஷ்மாவின் இந்த கவர்ச்சி போட்டோஷுட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

ரேஷ்மா அடுத்ததாக ஒரு கிடாயின் கருணை மனு எனும் படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கும் “சத்திய சோதனை” எனும் படத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி காமெடி கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here