செகி கல்லூரியின் அடுத்தகட்ட முயற்சி, நவீனத்தை நோக்கி செகி

உலகமே அதிநவீன தொழில்நுட்பத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. உணவு, மருந்து, கட்டுமானம், வாழ்வியல் என அனைத்திலும் நவீன தலைதூக்கி வருகிறது. குறிப்பாக தொழில்புரட்சி 4.0 முன்னேற்றத்திற்கு ஏற்ப உலக நாடுகள் செயல்படத் தொடங்கி விட்டன.

அந்த வகையில் உயிரியல் மருத்துவம், தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு அமைப்புடன் செகி கல்லூரி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. செகி கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கும் அடிப்படை தரவு மற்றும் 3டி வகையிலான வழிமுறை நவீன கருவிகள் பயன்பாட்டினை கற்றுக் கொடுக்கும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் அமைந்திருக்கும் செகி கல்லூரியில் உயிரியல் மருத்துவம், தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு மையத்தை அமைத்து அதன் மூலம் அடிப்படை சான்றிதழ் தரத்திலான கல்விகளை மாணவர்களுக்கு வழங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக செகி கல்லூரியின் விரிவுரையாளர் ஸ்ரீ ஜெயேந்திரன் முனுசாமி கூறினார்.

கோவிட் – 19 தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பலர் வேலை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த இந்தத் துறைகளில் வேலை வாய்ப்புகள் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இல்லை.

3டி டாத்தா சிஸ்டம் முறை தற்போது எல்லாத் தொழில்துறைகளிலும் பயன்படுத்துகின்றன. உணவுக் கடைகளில் கூட இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த துறையில் தான் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு செகி குழுமம் இந்த முயற்சியை மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

நேற்றுக் காலை 10 மணியளவில் இரு தரப்புகளுக்கிடையில் கையெழுத்து ஒப்பந்தம் ஙெ்ய்துகொள்ளப்பட்டது. இதன் வழி அடிப்படை கல்விகள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். செகி கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் வந்து கற்றுக் கொள்ளலாம். இத்துறையில் அடிப்படையான விஷயங்கள் மட்டுமே கற்றுத் தரப்படும். சான்றிதழ் தரத்திலான கல்வி முறை இதில் அமல்படுத்தப்படும்.

உயிரியல் மருத்துவம், தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு அமைப்பு மலாயா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டதாகும். பல தொழில்துறைகளுக்கு டாத்தா சிஸ்டம் முறைகளை கற்றுக் கொடுத்து வந்த இந்த அமைப்பு முதன் முறையாக செகி கல்லூரியுடன் கைக்கோத்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது என்று அதன் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் குமார் கூறினார்.

இதன்மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். அதோடு இத்திட்டத்தினால் தொழில்முனைவர்களை உருவாக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆர்டிபிஷியல் இண்டலெஜன்ஸ் துறை என்பது அனைவருக்கும் பரீட்சையமான ஒன்றாக இருந்தாலும் இதன் நுணுக்கம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. நாம் அன்றாடம் வாழ்க்கையில் செய்யக் கூடிய விஷயங்களை மீண்டும் நமக்கு நினைவுப் படுத்தும் இத்துறைதான் எதிர்காலத்தில் அதிக தேவையான ஒரு துறையாக அமையும் என்று அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை மலேசியா அதிக வருமானம் பெருகக்கூடிய நாடாக உருமாறும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு உலக வங்கி தெரிவித்தது. இதனால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன.

ஆனால் தொழில்புரட்சி 4.0க்கு நாம் மாறி அதனுள் இருக்கக்கூடிய துறைகளை கற்றுக் கொண்டால் அதிக வருமானம் பெறக் கூடியவர்களாக உருமாற முடியும். கோவிட்-19 பாதிப்பால் இணையம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே இதுதான் சரியான தருணம். நாமும் இந்த துறைகளுக்குள் நுழைந்து நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று செகி குழும கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஸ்டெல்லா லாவ் கூறினார்.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உயிரியல் மருத்துவம், தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஸைனால் அரிஃப் அப்துல் ரஹ்மான், செகி குழும கல்லூரியின் இயக்குநர் டாக்டர் லிசா டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here