போலி மதுபானம் குடித்து 38 பேர் பலி

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, அமிர்தசரஸின் ஊரக பகுதிகளில் பத்து பேரும், படாலாவில் ஒன்பது பேரும், தர்ன் தரனில் 19 பேரும் போலி மது அருந்தியதால் இறந்தனர். போலி மதுபான பயன்பாடு பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போலி மதுபானங்கள், கலன்கள் போன்றவை மீட்கப்பட்டு அவை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்த பிராந்தியத்தில் போலி மதுபான கும்பல்களின் செயல்பாடு முடக்கப்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும்” என்று அவர் மேலும் கூறினார்.

தங்களது கிராமத்தில் போலி மதுபானம் தொடர்பாக தொடர்ச்சியாக மரணங்கள் நடந்து வருவதாக முச்சால் எனும் கிராமத்தின் முன்னாள் தலைவர் சுக்ராஜ் சிங் கூறுகிறார்.

“எங்கள் கிராமத்தில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை பொறுப்பு கூற வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

“என் குடும்பத்தை நொறுங்க வைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்,” என்று கூறுகிறார் உயிரிழந்தவர்களில் ஒருவரான ஜஸ்வீந்தர் சிங் என்பவரின் மனைவி வீரத் கவுர்.

இது தொடர்பாக ஒரு பெண் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் உடல்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு இறப்புக்கான காரணம் கண்டறியப்படும்.

இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் சானிடைசர் குடித்து 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன என மது கிடைக்காததால் சானிடைசரை குடித்துள்ளனர் என மூத்த போலீஸ் அதிகாரி சித்தார்த் கெளஷல் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here