நகைக் கடையில் போலி நகைகளை மாற்றி வைத்த ஊழியர் கைது

கோலாலம்பூர்: தங்க நகைகளை போலி நகைகளாக மாற்ற முயன்றதாக 31 வயது நகைக்கடை ஊழியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த வியாழக்கிழமை கடை உரிமையாளரிடம் இருந்து போலீசாருக்கு  தகவல்  கிடைத்ததாக கோம்பாக் ஒ.சி.பி.டி உதவி ஆணையர் அரிஃபாய் தாராவே தெரிவித்தார்

தனது அறிக்கையின் அடிப்படையில், அவர் தனது ஊழியர்களில் ஒருவர் இரண்டு தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க நெக்லஸை எடுத்து போலி தங்கப் பொருட்களை மாற்றி விட்டார் என்று கூறினார். அதே நாளில் மாலை அந்தப் பெண்ணை தாமான் ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள அவரது வீட்டில் கைது செய்தோம்,” கூறினார். ஏ.சி.பி அரிஃபாய் மேலும் கூறுகையில், தங்க பொருட்களின் மதிப்பு  .5,200 வெள்ளி ஆகும். விசாரணையில் சந்தேக நபர் ஜூன் 23 முதல் கடையில் பணிபுரிந்து வருவதாகவும், அதற்கு முன் குற்றவியல் பதிவு இல்லை என்றும் கூறினார்.

“கடை உரிமையாளர்  மூன்று பொருட்களையும் பரிசோதித்தபின் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார், அவை உண்மையான தங்கம் அல்ல என்பதை உணர்ந்தோம். தெரெங்கானுவில் உள்ள ஒரு கடையில் இருந்து தங்க வளையல்களில் ஒன்றை மீட்டெடுக்க முடிந்தது, அதே நேரத்தில் மற்றொரு வளையல் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஒரு கடையில் இருந்து மீட்கப்பட்டது என்றார். மீட்கப்பட்ட மூன்றாவது பொருள் சந்தேக நபரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி என்று ஏ.சி.பி ஆரிஃபாய் கூறினார்.அவர்கள் விசாரணை ஆவணங்களை துணை அரசு வக்கீல் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் சந்தேக நபர் குற்றம் சாட்டப்படுவார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here