கேரளாவில் கொரோனா பாதித்தவர் வீடு மீது கல்வீச்சு

கேரள மாநிலம் வயலார் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென அந்த வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமடையவில்லை. அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களால் தான் அந்த பகுதியில் கொரோனா பரவியதாக, வதந்தி பரவி இருக்கிறது. இதன் காரணமாகவே மர்மநபர்கள் இந்த அவல கல்வீச்சு தாக்குதலை நடத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here