கோலாலம்பூர், ஆக. 30-
சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வண்ணம் பத்து கேவ்ஸைச் சேர்ந்த புனவேஸ்வரி என்பவர் 63 அடியில் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் ராட்சத குர்த்தாவை உருவாக்கியுள்ளார்.
கோவிட் 19 கிருமி தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில் குர்த்தாவை தயாரிக்கும் எண்ணம் தமக்கு வந்ததாக புவனேஸ்வரி கூறினார்.
அதோடு தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த குர்த்தாவை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் தனது தேசப்பற்றை வெளிப்படுத்துவதோடு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நல்ல நோக்கத்தில் இம்முயற்சியில் இறங்கியதாகவும் அவர் சொன்னார்.
கோவிட் முடக்கத்திலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இப்பெண் எடுத்த முயற்சிக்கு நிச்சயம் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதோடு இது போன்ற முயற்சிகளை வரவேற்றுமானால் இன்னும் அதிகமான இளைஞர்கள் புதிய சிந்தனைகளுடன் செயல்படுவர். எனவே புவனேஸ்வரியின் முயற்சியை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் பார்வைக்கு கொண்டுச் சென்றேன்.
புவனேஸ்வரியின் தேசப் பற்றை பாராட்டியதோடு அவருக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டு கொண்டார். அதை தொடர்ந்து அந்த ராட்சத குர்த்தாவை பத்துமலை திருத்தலத்தில் நிறுவுவதற்கு முழு செலவையும் தாம் ஏற்றுக் கொண்டதாக டத்தோ சிவகுமார் கூறினார்.
– தி.மோகன்