அதிசய சிவன் ஸ்தலம்

இந்த ஸ்தலத்தின் புராண பெயர் அரிகேசநல்லூர் என்பதாகும் . இங்குள்ள தீர்த்தம் சுரபி தீர்த்தம் எனப்படுகிறது . தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ளது பூலாநந்தீஸ்வரர் சிவாலயம்.
இந்த ஸ்தலம் புராணங்களில் பாடப்பட்ட ஸ்தலமாகும் . இந்த கோயிலில் இயற்கைக்கு அப்பாற்ப் பட்ட பல அதிசயங்கள் நடக்கின்றன. புராண காலங்களில் சூதமா முனிவரிடம் நைமிசாரண்ய முனிவர்கள் உலகிலேயே உயர்ந்த சிவ ஸ்தலம் எது என்று கேட்டதற்கு சூதமா முனிவர் பதிணென் புராணங்களில் ஒன்றான கத்த புராணத்தில் வரும் சங்கர சம்ஹிதையில் இடம் பெற்றிருக்கும் பூலாவனமே உயர்ந்த சிவ ஸ்தலமாகும் என்று கூறுகிறார் . இந்த ஸ்தலத்தில் உள்ள சிவாலயம் தான் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலாநந்தீஸ்வரர் கோயில் . சிவ பெருமான் பூலா ஆரண்யத்தில் இருந்தமையால் இவர் பூலோவனேசா என்றும் பூலாநந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த பகுதி பூலா மரங்ககள் அதிகமாக உள்ள பகுதி . இந்த கோயிலின் தல விருட் சமும் பூலாமரம் தான் .

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன் என்பதாகும் . இந்த அம்மனுக்கு எப்போதும் முகம் வேர்த்த படியே இருக்கிறது. அர்சகர்கள் எத்தனை முறை துடைத்தாலும் மீண்டும் முகம் வேர்க்க ஆரம்பித்து விடுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சிவன் காண்போரின் உயரத்திற்கு ஏற்றவாறு அளவில் மாறி மாறி காட்சி தருகிறார். அதனால் பக்தர்கள் இவரை அளவிற்கு அளவானவர் என்று அழைக்கின்றனர் .

முற்காலத்தில் இந்த பகுதியை ஆண்டு வந்த இராசசிம்ம பாண்டியனுக்கு ஈசன் நேரில் காட்சி தந்து அருளினார் அப்போது மன்னன் ஈசனை தழுவி கண்ணீர் விடுகிறார் அப்போது மன்னனின் முக மண்டலமும் மார்பு கவசமும் கைக்கடங்களும் ஈசனின் திருமேனியில் ஆழமாக பதிகிறது . இந்த அடையாளங்கள் மூலவர் மேனியில் இன்றும் தெரிகிறது. நாகலங்க மரம் சில கோயில்களில் தல விருட்சமாக இருக்கும் . இங்கும் அது தலவிருட்சமாக உள்ளது . ஆனால் இதன் பூ வித்யாசமாக சிவலிங்கத்திற்கு மேல் குடை பிடிக்கும் நாகங்களை போல் உள்ளன . இக்கோயில் தீர்த்தமான சுரபி தீர்த்தத்தில் இறந்தவர்கள் எலும்புகள் கற்களாக மாறுகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here