மலையாள சின்னத்திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சபரிநாத். இவர் பல மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். பிரபல சின்னத்திரை நடிகரான சபரிநாத் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பலரை அதிச்சிக்குள்ளாகியுள்ளது. அவருக்கு வயது 43.
பேட்மிண்டன் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார் சபரிநாத். நேற்று பேட்மின்டன் விளையாடி கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சபரிநாத் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
43 வயதே ஆன சபரிநாத் திடீரென உயிரிழந்தது மலையாள சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சபரிநாத்துக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.























