வெற்றி மாறனின் படத்திற்காகவா?

சூரி முத்துச்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட நகைச்சுவை நடிகர் சூரி அவர்கள் தனது வித்தியாசமான புகைப்படம் ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார் சூரி. இவர் முதலில் சினிமாவில் தோன்றிய காட்சி எதுவென்றால் 1998ஆம் ஆண்டில் நடிகர் மம்முட்டியின் நடிப்பில் வெளிவந்த மறுமலர்ச்சி திரைப்படத்தில் தான். இந்த படத்தில் இவர் கூட்டத்தில் ஒருவராக இருப்பார்.

2009ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணுவின் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலமாக இவர் பெரிதும் அறியப்பட்டார். அந்த படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் இவர் பரோட்டா சாப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு இவர் பரோட்டா சூரி என்ற அடைமொழியோடு வலம் வருகிறது.

தற்போது இவர் கட்டுக்கோப்பான உடற்கட்டோடு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் அந்த பதிவில் “எனக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் தந்த என்னுடைய பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி” என்று கூறி இருக்கிறார். இந்த படம் புதிய படத்திற்கான புதிய அவதாரமாக என்பது தெரியவில்லை. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் அஜ்னபி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here