முதல்முறையாக போர் கப்பலில் பெண்கள் தேர்வு

போர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்களை இயக்கும் பிரிவுக்கு, முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள், கப்பல் படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளிலும், பெண்கள் களத்தில் பணியாற்றுவது அதிகரிக்க துவங்கிஉள்ளது. ஆனாலும், போர்க் கப்பல்களில், பெண்கள் பணியாற்றாத நிலை இருந்தது.இந்நிலையில், போர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்கள் இயக்கும், ‘அப்சர்வர்’ பணிக்கு, முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள் தேர்வாகி உள்ளனர். துணை லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் ரித்தி சிங் ஆகியோர், இப்பணிக்கு தேர்வாகி உள்ளனர். கேரளாவின், கொச்சி கப்பல் படை தளத்தில், ‘ஐ.என்.எஸ்., — கருடா’ கப்பலில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு புதிய பெண் அதிகாரிகள், பொறுப்பேற்றுக் கொண்டனர்.

‘முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள், போர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்கள் இயக்கும் பணிக்கு தேர்வாகி உள்ளது, மேலும் பல பெண்களை, போர்க் கப்பல்களில் பணியாற்ற ஊக்குவிக்கும்’ என, விழாவுக்கு தலைமை வகித்த, அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் தெரிவித்தார். ரபேல் இயக்கும் பெண் விமானிநம் விமான படையில், 1,875 பெண்கள் பணியாற்றுகின்றனர். இதில், 10 பெண்கள், போர் விமானங்களின் பைலட்களாக உள்ளனர். இந்நிலையில், நம் படைப் பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, ரபேல் போர் விமானத்தை இயக்க, பெண் விமானி ஒருவருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர் பயிற்சி முடித்து, ரபேல் போர் விமானங்களை இயக்கும், ‘கோல்டன் ஆரோ’ படையில் விரைவில் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here