காட்டுப் பன்றி தாக்கி தம்பதியருக்கு காயம்

ஈப்போ: தம்பதியினர் ஓட்டி வந்த  காரை காட்டுப் பன்றி  தாக்கியதில் காயம் ஏற்பட்டதோடு வாகனம் சாலையின் ஓரத்தில் சறுக்கியது.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (செப்டம்பர் 23) காலை 7 மணியளவில்  ஒரு  அழைப்பு வந்தது என்றார்.ஜலான் பிடோர்-சுங்கை டிரங்க் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.

41 வயதான மனிதர் மற்றும் அவரது 27 வயது மனைவி சிகிச்சைக்காக ஸ்லிம் ரிவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்  என்று அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் காட்டுப் பன்றி இறந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here