இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இருவரும் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கேரளா சென்றனர். அங்கிருந்து அப்படியே கோவா சென்றது காதல் ஜோடி. அங்கு நயன்தாராவின் தாயார் பிறந்தநாளை முதலில் கொண்டாடினர்.
இதையடுத்து விக்னேஷ் சிவன் பிறந்தநாளையும் கோவாவில் கொண்டாடினர். அப்போது அவருக்கு கேக், அலங்காரம் செய்யப்பட்ட அறை, இசை, பாடல் என சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தினார் நயன்தாரா. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூகவளைதளப் பக்கத்தில் பகிர்ந்திருதார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்று ஒரு நாளைக்கு மட்டும் கோவா நட்சத்திர விடுதியில் நயன் செலவு செய்த தொகை ரூ.25 லட்சம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.