அனைவரும் ஒன்றிணைந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் – மெஸ்சி

சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனா பேயர்ன் முனிச் அணக்கெதிராக 2-9 என படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்சி மீது கடும் விமர்சன்ம எழுந்தது. இந்தத் தோல்வியால் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டு புது பயிற்சியாளராக ரொனல்டு கோமென் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இளம் வீரர்களை கொண்டு புதிய அணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில் லூயிஸ் சுவாரஸ்-ஐ அட்லடிகோ மாட்ரிட் அணிக்கு கொடுக்க பார்சிலோனா ஒப்பந்தம் செய்தது. இது மெஸ்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பார்சிலோனா உரிமையாளரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ”ஏராளமான விவாதங்களுக்குப் பிறகு, அவற்றை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என கருத வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே திசையில் இழுக்க வேண்டும். என்னுடைய தவறுக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் இருந்திருந்தால், அது மட்டும் பார்சிலோனாவை சிறந்தது, வலிமையாக்கியிருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here