சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி ஒத்தி வைப்பு

ஷாஆலம்: மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட் -19 சம்பவங்கள் குறித்த  காரணமாக அக்டோபர் 3-4 முதல் நடைபெறவிருந்த சிலாங்கூர் மெகா வேலை கண்காட்சி 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களை சிலாங்கூர் அரசு பின்பற்றி வருகிறது.

சிலாங்கூரில் 13 புதிய சம்பவங்கள் உட்பட இப்போது ஒட்டுமொத்த உள்ளூர் சம்பவங்கள் 2,007ஆக உள்ளன என்று சிலாங்கூர் இளைஞர் தலைமுறை மேம்பாடு, விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டுக் குழுத் தலைவர் மொஹமட் கைருடீன் ஓத்மான் (படம்) வியாழக்கிழமை (அக் 1) செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும்  உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள்  பல தரப்பினரிடையே கவலைகளை எழுப்பியுள்ளன. சிலாங்கூர் சுகாதாரத் துறை மற்றும் சிலாங்கூர் பணிக்குழு கோவிட் -19 ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில், ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் அக்.1 ஆம் தேதி தெரிவித்தார்.

இந்த வார இறுதி நிகழ்வில் 8,150 ஆன்லைன் பதிவுகளை பதிவு செய்துள்ளதாகவும் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக ஜாப்ஸ் மலேசியா சிலாங்கூருக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கைத் தொடர்ந்து வேலையின்மைக்கு தீர்வு காணும் நோக்கில், சிலாங்கூர் மெகா வேலை கண்காட்சி 2020 மற்றும் மாவட்ட தொழில் துறை வேலை வாய்ப்புகள்  அக்டோபர் மாதம் மாநிலம் முழுவதும் ஒன்பது இடங்களில் நடத்தப்படவிருந்தன.

அக்டோபர் 10 ஆம் தேதி கோலா சிலாங்கூரில் தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி சபா பெர்னாமில் முடிவடையும் மாவட்ட தொழில் திருவிழாக்கள் ஒத்திவைக்கப்படுமா அல்லது மறுபரிசீலனை செய்யப்படுமா என்று கூறப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here