தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித்தோடு ஆசை படத்தில் இணைந்து நடித்து இருந்த நடிகர் மாரியப்பன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய விசயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதாவது தல அஜித் ஆசை படத்தில் நடித்தபோது தன்னுடைய தொழிலாளர்களுக்கு பீர் வாங்கிக் கொடுப்பார். சில சமயங்களில் எங்களுடன் சேர்ந்து அவரும் குடித்ததுண்டு. அப்போது நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தால் எப்படி ஒரு சில கெட்ட வார்த்தைகளை பேசுவோமோ அதேபோல் அஜித்தும் பேசுவார்.
ஆனால் இப்போது சில சூழ்நிலையால் அவர் குடிப்பதில்லை என தெரிவித்துள்ளார். தன்னுடைய பிள்ளைகளின் பள்ளி செலவுக்கு அஜித் தான் உதவினார் எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.