பிக்பாஸ் 4ல இவர் தான் அடுத்த முகின்!

தமிழக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாகவே சூடு பிடித்துள்ளது. இந்த சீசன் 4 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இன்று இரவு முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுப்படுத்தும் நிகழ்வு என்பதால் பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல மாடல் அழகன் சோம் சேகர் இதில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர் முகினை போலவே குறும்படங்கள், விளம்பரங்கள், பாடல் ஆல்பம், பாக்ஸிங் என பல வித்தைகளை கையில் கொண்டிருப்பதால் நிச்சயம் இவருக்கு பெண் ரசிகைகளின் ஆதரவு அதிகரித்து டைட்டில் கார்ட் வெல்ல வாய்ப்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் இப்போதே வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here