கருணாஸுக்கு ஜோடியான லட்சுமி மேனன்!

காமெடி வேடங்களில் நடித்துவந்த கருணாஸ், ஹீரோவாக நடித்து வெளியான படம் ‘திண்டுக்கல் சாரதி’. சிவ சண்முகம் இயக்கிய இந்தப் படத்தில், கருணாஸ் ஜோடியாக கார்த்திகா நடித்தார்.

சரண்யா பொன்வண்ணன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சீனிவாசன் இயக்கிய ‘வடக்குநோக்கியான்ட்ரம்’ (Vadakkunokkiyantram ) என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இது, 2008ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘திண்டுக்கல் சாரதி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் ஈடுபட்டுவந்த கருணாஸ், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘திரெளபதி’ படத்தில் நடித்த கருணாஸ், வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனாலும், ஹீரோ ஆசை மட்டும் விடவில்லை. எனவே, ‘திண்டுக்கல் சாரதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதில், கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி மேனன், ‘கும்கி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘கொம்பன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘வேதாளம்’ படத்தில் அஜித்துக்குத் தங்கையாகவும் நடித்தார்.

சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் சினிமாவைவிட்டு விலகியிருந்த லட்சுமி மேனன், கருணாஸ் ஜோடியாக நடிப்பதன் மூலம் மறுபடியும் என்ட்ரி ஆகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here