கோலாலம்பூர்:
மலேசியாவின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள ‘பார்ட்டி பெர்சாமா மலேசியா’ (Bersama) கட்சியில் இணைந்துள்ள முதல் 20,000 உறுப்பினர்களில், கிட்டத்தட்ட பாதி பேர் (46 விழுக்காட்டினர்) இதற்கு முன்பு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இல்லாத புதியவர்கள் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆர் (PKR) கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான நிக் நஸ்மி, மாற்று அரசியல் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களே தங்களின் மிகப்பெரிய பலம் என்றும், மாற்று அரசியல் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் சிறுபான்மையினரே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பான்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் இக்கட்சியைப் பொறுப்பேற்ற பிறகு, அதன் அதிகாரப்பூர்வ உறுப்பினர் விவரங்கள் தற்போதுதான் முதல்முறையாக விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
பெர்சாமா கட்சியில் இணைந்துள்ள முதல் 20,000 உறுப்பினர்களில் முன்னைய அரசியல் பின்னணி அதாவது எந்தக் கட்சியிலும் இல்லாத புதியவர்கள் (அரசியல் சாரா வாக்காளர்கள்) 46.0% என்றும், PKR முன்னாள் உறுப்பினர்கள் 29.0%, Umno- 6.3%, PAS- 5.2%, Amanah -2.5%, Bersatu 2.5% Muda)-.2%, DAP -1.3%இதன் மூலம், மலேசியாவின் முக்கிய நான்கு மலாய் பெரும்பான்மை கட்சிகளான அம்னோ, பாஸ், பெர்சத்து மற்றும் அமானா ஆகியவற்றில் இருந்து மட்டும் ஒட்டுமொத்தமாக 15% உறுப்பினர்கள் பெர்சாமாவில் இணைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.





















