உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது.
இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ காலை 9 மணிக்கு வெளியாகி இருந்தது. தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடல் ஒளிபரப்பாக போட்டியாளர்கள் செம குத்தாட்டம் போட்டனர்.
தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் சிவானி நாராயணனை ரவுண்ட் கட்டி குற்றம் கூறுகின்றனர்.
சனம் ஷெட்டி பேசும்போது சிவானி நாராயணருக்கு அனுபவம் இல்லை என கூறுகிறார். வயதுக்கேற்ற பக்குவம் இல்லை என பேசுகிறார். நான் எல்லாரோடையும் சேர நாளாகும் என சிவானி கூற சுரேஷ் சக்ரவர்த்தி நேத்து நல்லா தானே என் கிட்ட பேசின என ரஃப் அண்ட் டப்பாக பதில் கொடுக்க சிவானி கண்களில் கண்ணீர் வடிகிறது.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி சிவானி ரசிகர்களை ஷாக் ஆகி உள்ளது. முதல் நாளே என் செல்லத்தை இப்படி அழ வச்சிட்டீங்களே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.