‘Air China’ விமான இயந்திரத்தில் தீ; சிங்கப்பூரில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்

சீனாவின் செங்டு நகரிலிருந்து பயணம் மேற்கொண்ட Air China பயணிகள் விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலை உருவானது.

காலை 11.05 மணிக்கு தியான்ஃபு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட CA403 விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் பகுதியிலும் கழிவறையிலும் புகை மூண்டது. தியான்ஃபு விமான நிலையம் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில் இந்த விவரம் இடம்பெற்றது.

பிற்பகல் 4.15 மணியளவில் இந்த விமானம் சிங்கப்பூரின் மூன்றாவது விமான ஓடுபாதையில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் விமான இயந்திரத்தில் மூண்ட தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சாங்கி விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here