விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.

இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது முன்னதாகவே திடீரென பிரசவ வழி வந்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது.

அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே விமானத்தில் குழந்தை பிறந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இண்டிகோ விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here