திருமணமாகிய 4 மாதத்தில் நிகழ்ந்த சோகம்!

திருமணமாகிய 4 மாதத்தில் நீலகிரி தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்ப்பவர் தான் தயானந்தன். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் வினோதினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருமே தேயிலை தோட்டத்தில் தான் வேலை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டு கதவு நேற்று வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்தப்பொழுது உள்ளே இருவரும் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமான புதிதில் தம்பதிகள் இருவரும் ஒரேடியாக தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here