இவ்வளவு நீளமான கொம்புகளா? – கின்னஸ் சாதனை படைத்த காளை

அமெரிக்காவைச் சேர்ந்த காளை ஒன்று உலகின் நீண்ட கொம்புடைய காளை என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. இந்தக் காளையில் கொம்புகள் மட்டுமே எட்டு அடி நீளம் கொண்டவை.

வரும் நவம்பர் 18 ஆம் தேதி உலக கின்னஸ் சாதனை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால், சாதனை புத்தகத்தில் இடம்பெறுவர்களின் பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சமீபத்தில்தான், 17 வயது இளம்பெண் ஒருவர் உலகின் நீண்ட கால்கள் கொண்ட பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது cowboy tuff chex என்ற காளை ஒன்று நீண்ட கொம்புகளுக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ரிச்சர்ட் மற்றும் ஜீன் பிலிப் ஆகிய கால்நடைப் பண்ணையாளர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த காளையை ஏலத்தில் எடுத்து வளர்த்து வருகின்றனர். இதன் நீளக் கொம்புகளை பாதுகாக்கவே தனி வாகனமும் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பொதுமக்கள் தற்போது இந்தக் காளையைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here