இது குறித்து மத்திய உள்துறை மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ” பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மாநில அரசு சட்டப்படி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை உடனடியாக மாநில அரசின் தலையீட்டில் சேகரிக்கப்பட வேண்டும். முழு விசாரணையும் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளை கிரிமினல் வழக்காக தொடரப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிராக குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் பட்டியலை சேகரித்து வைத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தாமதித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க தவறவிடக்கூடாது.
விசாரணையில் தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், வழக்கை உரிய நேரத்தில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளுக்கு பிரிவு 166, பிரிவு 154, பிரிவு 173, பிரிவு 164 போன்றவற்றில் வழக்கும் தொடரவும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.