ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

இஸ்லாமாபாத்:

ப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணம் குசாரா மாவட்டத்தில் உள்ள ஷியா பிரிவினர் மசூதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

அவர் சரமாரியாக சுட்டதில், மசூதியின் இமாம் உட்பட தொழுகையில் இருந்த 6 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பி ஓடிவிட்டதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடப்பதாக தலிபான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை பிரிவினரான ஷியா பிரிவு மசூதியை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here