மஞ்சள் நிறத்தில் வீட்டை மாற்றிய தோனி ரசிகர்

கிரிக்கெட் வீரர்தோனிக்காக, ரசிகர் ஒருவர்,தன் வீட்டை, 1.50 லட்சம்ரூபாய் செலவில் மஞ்சள்வர்ணம் பூசியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்களை, வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன், 30; சிறுவயது முதலே தீவிர கிரிக்கெட் ரசிகர்.தற்போது நடந்து வரும், ஐ.பி.எல்., தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இதற்காக, ரசிகர்கள் தோனியை அவதுாறாக பேசுவது, இவரை சோகத்தில் ஆழ்த்தியது. எனவே, தோனி பற்றி நேர்மறையான எண்ணங்களை ரசிகர்களிடையே உருவாக்கும் நோக்கத்தில், தன் வீட்டை, ‘ஹோம் ஆப் தோனி பேன்’ என்ற பெயரில், மஞ்சள் கலரில் சூப்பர் கிங்ஸ் அணியின் படத்தோடு வர்ணம்பூசி மாற்றியுள்ளார்.

இது, கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.கோபிகிருஷ்ணன்கூறுகையில், ”வீட்டிற்கு வர்ணம் பூச, 1.50 லட்சம் ரூபாய் செலவானது.அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடும் தோனி,என்றுமே கிரிக்கெட்உலகின் தல,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here