ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில், விஷால் நாயகனாக நடிக்க, அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். இப்படத்தில், நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.
இவர், ‘டப்மாஷ்’ மூலம் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை அடுத்தாண்டு துவங்கி, 2022 பொங்கலன்று, படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
























