புணேவில் கனமழை: 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்

புணேவில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 17 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. எனினும் கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடர் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலரது இல்லங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் புணேவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோலாப்பூர் பகுதியில் உள்ள 17 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உஜ்ஜயினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், பண்டார்பூர் தெஹ்ஸில் பகுதி மற்றும் பீமநதியோரம் உள்ள 46 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 4,865 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மண்டல அவலுவலர் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டுச் செல்வதற்காக 18 மீட்புப்படைக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here