மலையாள நடிகர் சங்க படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை

மலையாள சினிமா நடிகர் சங்கம் சார்பில் கடந்த 2008ம் ஆண்டு டுவென்டி 20 என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டது. நடிகர் சங்க வளர்ச்சிக்காக இந்த படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், பிரித்விராஜ் உள்பட பெரும்பாலான நடிகர்களும், பாவனா, நயன்தாரா, கோபிகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்திருந்தனர். இந்தப்படம் அப்போது சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படத்தில் நடிக்க எந்த நடிகர், நடிகைகளும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏராளமான நடிகர் நடிகைகள் வாய்ப்பில்லாமல் அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க மலையாள நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறுகையில், ‘‘மலையாள நடிகர் சங்கம் சார்பில் 2வது படம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் முதல்படமான டுவென்டி 20ஐ போலவே அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகை பாவனாவுக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. அவர் தற்போது நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும்? எனவே அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here