தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்திக். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மிகவும் பிரபலமானார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவரின் ரசிகர் பட்டாளம் இரு மடங்கானது.
சீரியலில் இவருக்கும் ஷபானாவுக்கும் இடையேயான காம்பினேஷன் கச்சிதமாக பொருந்தி போனதால் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கு அடுத்ததாக நடிகர் கார்த்தி வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முகிலன் என்ற பெயரில் zee5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.
இதற்காக நடிகர் கார்த்தி வித்தியாசமாக மாறிப்போய் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிலர் கார்த்திக் ராஜன் இந்த நியூ லுக்கை கலாய்க்கும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்
நம்ம செம்பருத்தி ஆதியின் வேற லெவல் மாஸ் first look! கண்ணா இது வெறும் Trailer தான்! Main picture வெறித்தனமா இருக்கும்! #Mugilan #Zee5 #ZeeTamil pic.twitter.com/Z4TSsBMPPJ
— Zee Tamil (@ZeeTamil) October 15, 2020