தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என பல மொழிகளில் 2,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம். 1970ம் ஆண்டு ஜூலை 9ம் தெதி பிறந்த அனுராதா ஸ்ரீராம் சினிமா பின்னணி பாடகி மட்டுமல்லாமல் அவர் ஒரு கர்நாடக இசை பாடகியும் ஆவார். 1995ம் ஆண்டில் இருந்து சினிமா பாடல்களைப் பாடிவரும் அனுராதா ஸ்ரீராமுக்கு தற்போது 50 வயதாகிறது.
இந்த நிலையில், அனுராதா ஸ்ரீராம் குழந்தையாக இருக்கும்போது, நடிகர் ரஜினிகாந்த் அவரை கையில் தூக்கிவைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்து முதலில் திகைப்பவர்கள், அந்த குழந்தையின் சிரிப்பை வைத்து அனுராதா ஸ்ரீராமை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் காளி திரைப்படத்தில் ரஜினிகாந்த் படத்தில் அனுராதா ஸ்ரீராமும் சிறுவன் காஜா ஷெரீஃபும் ரஜினியுடன் நடித்துள்ளனர் என்பதை ரஜினி மக்கள் மன்றம் ட்விட்டர் குறிப்பிடுகிறது.
காலம் எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை இந்த புகைப்படம் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கூறுகிறது. இந்த புகைப்படத்தைப் பாருங்கள் இப்பவும் அனுராதா ஸ்ரீராமிடம் அதே சிரிப்பு, அதே குழந்தைத்தனம் மாறாமல் இருப்பதை உணர முடியும்.
Blast from the past.
Singer #AnuradhaSriram's childhood click with #Superstar #Rajnikanth.#Throwback pic.twitter.com/calFyTV1TL
— Cinema Ticket (@cinematkt) October 18, 2020