ஜப்பானிலும் ரஜினி ரசிகர்களை உருவாக்கிய

ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் முத்து. திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.1995 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜப்பானிலும் வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்களை நாடு கடந்து உருவாக்கியது.

இந்நிலையில் திரைப்படம் குறித்த நினைவுகளை கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு நாள் ரஜினி சார் என்னை அழைத்தார் எனக்கு ஒரு படம் இயக்க முடியுமா என்று கேட்டார். பெரிய குடும்பம் படம் அப்போது நடந்து கொண்டிருந்தது அதற்குப் பிறகு செய்கிறேன் என்றேன். தேன்மாவின் கொம்பத்து படம் பற்றிய அவுட்லைனை என்னிடம் தெரிவித்தார்.உடனே திரைக்கதை எழுதுங்கள் என்றார். அப்போது எங்களுக்கும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை செலவுக்காக பணம் தருகிறேன் என்றார்.ஹோட்டல் அறையில், ரமேஷ்கண்ணா மற்றும் சில உதவி இயக்குனர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு திரைக்கதை எழுதத் தொடங் கினோம். ஸ்கிரிப்ட் ரெடி ஆனதும் ரஜினி சாரிடம் தெரிவித்தேன் இப்போது தேன்மாவின் கொம்பத்து பாருங்கள் என்றார்.

போய் பார்த்தால் அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை ரஜினி சிரித்தார். ஸ்கிரிப்ட் எழுவதற்கு முன்னர் இன்ஸ்பிரேஷன் இருக்கக்கூடாது என்பதால் அந்த படத்தை நான் பார்க்க வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கிறார்.முத்து படத்தில் ராஜா கதாபாத்திரத்திற்காக முதலில் நாங்கள் அரவிந்த்சுவாமியை தான் அணுகினோம் அதில் ரஜினிகாந்தை அறைவது போல ஒரு காட்சி உண்டு அவரோ ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தால் அதை எல்லாம் செய்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று மறுத்துவிட்டார்.

அடுத்து ஜெயராமை பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பு சந்தித்து பேசினேன் அறைவது போன்ற காட்சி மாற்றச் சொன்னார். கடைசியாக ரஜினி சார்தான் சரத்பாபுவை பரிந்துரை செய்தார் இருவரும் நல்ல நண்பர்கள். அது நல்ல பலனைத் தந்தது. ரஜினி சாரோட படம் பண்ணா அதை மனசுல வச்சுதான் வசனம் எழுதுவோம்.

நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் அல்லது விக்கல் இருமல் போன்ற வசனங்களை ரசிகர்களுக்காக வழங்கி விட்டோம். கிடைக்கிறது கிடைக்காம இருக்காது போல சில வரிகளை ரஜினி சாரே எழுதினார். துண்டை திருப்பிப் போடும் ஸ்டைலில் ரஜினி சாரை உருவாக்கிக் கொண்டார் ஆனால் வசனங்களோ ஸ்டைலோ படத்தின் கதையை தாண்டி எங்கும் செல்லவில்லை.மைசூரில் தான் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சியை முடித்துவிட்டு கிளைமாக்ஸ் காட்சிக்கு போய்விட்டோம். அங்கே 5 ஆயிரம் மக்கள் கூடி விட்டார்கள், படமே முடிஞ்ச மாதிரி இருக்கே என்றார்.உதயம் தியேட்டரில் மூன்றாவது வாரமே முத்து படத்தை தூக்கி விட்டார்கள். ஒரு படம் 50 நாட்கள் தான் ஓடினால் தான் அது சராசரியான படம் நான் கவலைப்பட்டேன். ஆனால், ரஜினி சார் நம்பிக்கையுடன் இருந்தார் கடைசியில் அந்த திரைப்படம் 88 நாட்களுக்கு ஹவுஸ்புல்லாக ஓடியது என்று நினைவலைகளை பகிர்ந்துள்ளார் கேஎஸ் ரவிக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here