நஸ்ரியா எப்படி ப்ரபோஸ் செய்தார் தெரியுமா..?

நஸ்ரியா மற்றும் பகத் பாஸில் ஜோடி அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபல மலையாள ஜோடி ஆகும். பகத் பாசில் ஒரு தனித்துவமான நடிகரும் கூட இவரின் நடிப்பு அனைத்து திரைப்படத்திலும் முக்கியமாகப் பேசப்படும் ஒரு விஷயம் ஆகும்.

அதன்படி இவர் சமீபத்திய ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்து கொண்டே ஒரு படத்தை டைரக்ட் செய்து நடித்து அசத்தியுள்ளார்.இதன் மூலம் வொர்க் பிரம் ஹோம் என்ற ஒரு விஷயத்தை சினிமாத் துறையிலும் இவர் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்கு உலக நாயகன் கமலஹாசன் உட்பட பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.சமீபத்தில் நஸ்ரியா தனது கணவருடன் “டிரான்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தற்பொழுது நஸ்ரியா பகத் பாசில் திருமண வாழ்க்கை என்பது சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “பெங்களூர் நாட்கள்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே நஸ்ரியா என்னிடம் வந்து “என்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறீர்களா மீதமுள்ள வாழ்க்கையில் நான் உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்” எனக் கூறினார்.

அதன்பின் நானும் ஏற்றுக் கொண்டேன். காதல் மலரவே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here