தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகை என்றாலும் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கதாநாயகியை மையப்படுத்தி உருவான கதை களமாக இருக்கும் ‘மிஸ் இந்தியா’ படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தத்ரூபமாக நடித்திருந்ததால் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் இந்த படமும் இவரை தனித்துவமாக காட்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றன.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீசாகி வைரலாகி வருகிறது. அதில் கீர்த்தி சுரேஷ் லேடி ரெமோ போன்று கெத்தாக ஒயிட் கலர் கோட் சூட்டில் மாஸ் காட்டியுள்ளார்.
மேலும் தாவணி புடவையில் அடக்கமாக பார்த்த கீர்த்தி சுரேசை இந்த கெட்டப்பில் பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கிப் போய்க் கிடக்கின்றன. அதேபோல் இந்த ட்ரெய்லரை கீர்த்தியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.
மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த கீர்த்தியின் ரசிகர்கள் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மிஸ் இந்தியா ட்ரெய்லர் பார்க்க: கிளிக் செய்யவும்