தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் துணை நடிகராக நடித்து வந்தவர் மதுரை மோகன். இவர் அஜித் நடித்த சிட்டிசன், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் நீண்ட அடர்த்தியான மீசை தான் இவரின் முக்கிய அடையாளம். இவரின் மீசைக்காகவே இவருக்கு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த ‘முண்டாசுப்பட்டினம்” படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது. இந்த படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றியிருப்பார். இப்படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பெற்று பல படங்களில் மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.



















