கட்டாயம் ஓட்டு போடுங்கள் அமெரிக்க மக்களிடம் பிரசாரம்!

‘அமெரிக்க அதிபர் தேர்தலில், கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்’ என மக்களிடம், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றன.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு இடையே, இந்த தேர்தல் நடப்பதால், ஓட்டுப்பதிவு குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, பிரசாரங்களில், மக்களிடம் கட்டாயம் ஓட்டுப் போட வலியுறுத்தப்படுகிறது.

கொரோனா காரணமாக, தபால் ஓட்டு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 கோடி வாக்காளர்களில், இதுவரை, எட்டு கோடிக்கும் அதிகமானோர் தபால் வழியாக ஓட்டளித்து விட்டனர்.டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தங்கள் பிரசாரங்களில், மக்களிடம், ‘ கட்டாயம் ஓட்டுப் போடுங்கள்; அது தான் மிகவும் முக்கியம்’ என, வலியுறுத்தி வருகின்றனர்.

அதிபர் டிரம்ப், ‘ அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும். இதுவரை நடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தல் மிகவும் முக்கியம்’ என, ஒவ்வொரு பிரசாரத்திலும் கூறி வருகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், ‘யாரும் ஓட்டளிக்காமல் இருக்க கூடாது’ எனக், கூறி வருகிறார்.

டிரம்ப் மற்றும் பிடனின் ஆதரவாளர்கள், மக்களிடம் ஓட்டுப் பேட வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். 2 இந்தியர்கள்ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு, பொருளாதார மீட்பு, வெளியுறவு கொள்கைகள் உட்பட, பல விவகாரங்களில் வழி நடத்த, ஆலோசகர்கள் உள்ளனர்.

இவர்களில், இருவர், இந்தியர்கள்.கொரோனா பரவலில் இருந்து மீள்வது பற்றி, ஜோ பிடனுக்கு, டாக்டர் விவேக் மூர்த்தியும், பொருளாதார விவகாரங்கள் பற்றி, ஹார்வர்டு பல்கலையைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ராஜ் செட்டியும், ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here