தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை, பிற்பகல், மாலை என மூன்று கட்டமாக 100 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசிக்கிறார்.

சட்டசபை தொகுதிவாரியாக மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

தனித்து போட்டியிடுவதா? கூட்டணி அமைக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here