தொழிலதிபருடன் விரைவில் திருமணமா?

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே, நடிகை லாஸ்லியாவிற்கும் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள லாஸ்லியா, “இப்போதைக்கு திருமண என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான்,” எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here