இலகு வகை விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது

கூலாய்: இலகு விமானத்தில் பயணித்த இரண்டு சிங்கப்பூரர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை இங்குள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்  47 ஆவது கிலோ மீட்டரில்  அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

காலை 11.13 மணியளவில் கூலாயை நோக்கிச் செல்லும் அவசர பாதையில் இந்த சம்பவம் நடந்ததாக ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை தளபதி அசிராஃப் நூர் மொஹமட் யூசோப் தெரிவித்தார்.

விமானம் அவசர அவசரமாக தரையிறங்குவதற்கு  இயந்திர செயலிழப்பு காரணமாக இருக்கும் சந்தித்ததாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தில் விமானியும் இணை விமானியும் காயமடையவில்லை என்றார்.

மேலதிக உதவிகளுக்காக தனது குழு அந்த இடத்தில் காத்திருப்பதாகவும், விமானிகள் மற்றும் விமானங்களும் ஜோகூர் பாருவில் உள்ள செனாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தேவையான நடவடிக்கைக்கு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசியாவின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏஎம்), ஜொகூரில் உள்ள அதன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு காலை 10.40 மணியளவில் விமானியிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறியது.

பிரீமியர் ஏர் சிங்கப்பூரால் இயக்கப்படும் தனியார் விமானம் செனாயிலிருந்து மலாக்காவிற்கு சென்று கொண்டு இருந்தது என்று CAAM தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் செஸ்டர் வூ கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை போக்குவரத்து அமைச்சின் கீழ் விமான விபத்து புலனாய்வு பணியகத்தால் நடத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here