காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் வீடியோ பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடிப்பில் “ஆடுகளம்” திரைப்படத்தை இவர் இயக்கினார். இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு “விசாரணை” என்ற படத்தை இவரே தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் மீண்டும் தனுஷ் நடிப்பில் “வடசென்னை” படத்தையும் இவரே தயாரித்து இயக்கி அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

கடைசியாக இவர் மீண்டும் நடிகர் தனுஷுடன் இணைந்து “அசுரன்” படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் “வாடிவாசல்”, நெட்பிளிக்ஸில் வெளிவரவுள்ள ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.

இவர் க்ரைம் த்ரில்லரான “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற திரைப்படத்தை வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் RDM இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here